கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி: கால் எலும்பு முறிவுக்கு சிகிச்சை

கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி: கால் எலும்பு முறிவுக்கு சிகிச்சை

நடிகர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கால் எலும்பு ற்றும் முதுகு தண்டவட பகுதியில் எலும்பு  முறிந்துள்ளது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் மாடிப்படியில் இருந்து கீழே தவறி விழுந்ததில் அவரது கால் எலும்பு முறிந்தது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள், கால் மூட்டு மற்றும் முதுகு தண்டவட பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறினர்.அவருக்கு இரண்டு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

லண்டனில் நடைபெறவுள்ள இந்திய திரைத் திருவிழாவில் கமல்ஹாசன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவதாக இருந்தது. ஆனால், தற்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டத்தால் அவர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.

சபாஷ் நாயுடு படத்தின் ஒரு பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் அண்மையில்தான் அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பினார். ஹைதராபாத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News