கனேடிய அமைச்சரை நாளை சந்திக்கிறார் மனோ

கனேடிய அமைச்சரை நாளை சந்திக்கிறார் மனோ

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கனடா நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டேபன் டையோன் நாளை தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணசேனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அமைச்சு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பின்போது தேசிய மொழிகள் சமத்துவ மேம்படுத்தல் கருத்திட்டத்தினை கனடா அரசாங்கத்தின் மூலம் வழங்கப்பட உள்ள 11.2 மில்லியன் கனேடிய டொலர் உதவி தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் மற்றும் கனடா அரசாங்கம் கைச்சாத்திடும் நோக்கில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் கெளரவ மனோகணசேன் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News