கனடாவிற்குள் சிரிய அகதிகளின் வருகையால் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இல்லை : ஆய்வில் தகவல்

கனடாவிற்குள் சிரிய அகதிகளின் வருகையால் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இல்லை : ஆய்வில் தகவல்

கனடாவிற்கு குடிபுகுந்துள்ள சிரிய அகதிகளினால் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இல்லை என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.25,000 சிரிய அகதிகளை கனடாவினுள் அனுமதித்தமை தொடர்பாக மக்களின் மனப்பாங்கை அறிய நடாத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின் முடிவுகளிலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர். 18 முதல் 24 வரை குடிவரவுத் திணைக்களத்தினால் 1.512 பேரிடம் இந்தத் தொலைபேசி மூலமான கருத்துக்கணிப்பு நடாத்தப்பட்டது.கருத்துக்கணிப்பின் முடிவுகளின்படி 44 வீதத்தினர், அகதிகளை அனுமதிக்கும் திட்டத்திற்கு ஆதரவாகவும், அவர்களில் 60 வீதத்தினர் அகதிகளின் வருகையின் பின்னரான அடுத்த ஆறுமாத காலப்பகுதியில், கனடாவின் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரிக்காது எனவும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

ஆனால், 35 வீதத்தினர் அகதிகளை அனுமதிக்கும் திட்டத்தை ஆதரிக்கவில்லை, அவர்களில் 55 வீதத்தினர் அகதிகளின் வருகையின் பின்னரான அடுத்த ஆறுமாத காலப்பகுதியில் கனடாவின் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரிக்கும் எனவும் கருத்துத் வெளியிட்டுள்ளனர்.siriasiriya

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News