ஒட்டாவா ஆசிரியை மீது பாலியல் குற்றச்சாட்டு

ஒட்டாவா ஆசிரியை மீது பாலியல் குற்றச்சாட்டு

ஒட்டாவா காவல் துறையினர் யலாக் கோவன் என்ற 32 வயதுடைய ஆசிரியை ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். இவர் தனது மாணவன் மீது பாலியல் சீண்டல்களை மேற்கொணடதற்கான ஆதாரங்கள் தமக்கு கிடைத்திருப்பதாக அவர்கள் கூறி உள்ளனர்.

2016 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பெறப்பட்ட முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட காவல் துறையினர் ஆசிரியை மீதான பாலியல் குற்றச்சாட்டை ஊர்ஜிதப்படுத்தி உள்ளனர். செவ்வாய் மாலை நீதிமன்ற விசாரணைகளுக்கு வீடியோ மூலம் ஆசிரியை ஆஜரானார்.

5000 டொலர் பிணையில் விடுவிக்கப்பட்ட ஆசிரியை மீது பல தடைகளை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. இளம் பிள்ளைகள் நடமாடும் பூங்காக்கள் மற்றும் நீச்சல் தடாகங்களுக்கு இவர் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அத்தோடு 16 வயதுக்கு குறைந்த ஆண் பிள்ளைகளை இவர் தனித்துச் சந்திப்பதையும்  நீதிமன்றம், யூலை 25ஆம் திகதி  நடத்தப்படும் விசாரணை வரை தடை செய்துள்ளது

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News