மூன்று மஞ்சள் கருக்களை கொண்ட அதிசய கோழி முட்டை

மூன்று மஞ்சள் கருக்களை கொண்ட அதிசய கோழி முட்டை

17 வய­தான மேகன் வொட்கின்ஸ் எனும் இந்த யுவதி, தனது மூத்த சகோ­தரி எமிக்கு சொந்­த­மான உணவு விடு­தி­யொன்றில் காலை உணவு தயா­ரிப்­ப­தற்­காக இந்த முட்­டையை உடைத்தார்.

இதன்­போது மூன்று மஞ்­சள் கருக்­களை அவர் கண்டார். மேகன் வொட்கின்ஸ் தந்தை சார்ளி கையும் அப்­போது அந்த உணவு விடு­தியில் இருந்தார். இது தொடர்­பாக சார்ளி கை கூறு­கையில், “சமை­ய­லுக்­காக உடைத்த முட்­டையில் 3 மஞ்சள் கருக்கள் இருப்­ப­தாக மேகன் கூறினார்.

ஆனால், அப்­பாத்­தி­ரத்தை அசைக்க வேண்டாம் எனவும் அந்த முட்­டையை சமைப்­பதை நிறுத்­து­மாறும் கூறினேன்.

முட்­டையில் 3 மஞ்­சகள் கருக்கள் இருப்­பது அனை­வ­ருக்கும் சற்று திகைப்பை ஏற்­ப­டுத்­தி­யது” எனக் கூறி­யுள்ளார்.

இக்­கு­டும்­பத்­தி­ன­ருக்குச் சொந்­த­மான கோழிப்­பண்ணை ஒன்­றி­லி­ருந்து இம்­முட்டை பெறப்­பட்­டி­ருந்­தது. சுமார் 50 கோழிகள் அங்கு உள்­ள­தா­கவும் அவை அண்­மை­யி­லேயே முட்­டை­யிட ஆரம்­பித்­த­தா­கவும் சார்ளி கை தெரி­வித்­துள்ளார்.

கோழி முட்­டை­களில் இரு மஞ்சள் கருக்கள் இருப்­ப­தற்­கான வாய்ப்பு ஆயி­ரத்­துக்கு ஒன்று எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஆனால், 3 மஞ்சள் கருக்களுக்கான வாய்ப்பு 2.5 கோடிக்கு ஒன்று என நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News