Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நடப்பு சம்பியன் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே. தீவுகள்; ஸ்கொட்லாந்துக்கு வரலாற்று வெற்றி, அவுஸ்திரேலியாவுக்கு இலகுவான வெற்றி

June 14, 2026
in News, Sports, முக்கிய செய்திகள்
0
நடப்பு சம்பியன் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே. தீவுகள்; ஸ்கொட்லாந்துக்கு வரலாற்று வெற்றி, அவுஸ்திரேலியாவுக்கு இலகுவான வெற்றி

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்றுவரும் பத்தாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் நேற்றைய போட்டிகளில் நடப்பு சம்பியன் நியூஸிலாந்தை மேற்கிந்தியத் தீவுகள் வீழ்த்தியது. ஸ்கொட்லாந்து வரலாற்று வெற்றியையும் அவுஸ்திரேலியா இலகுவான வெற்றியையும் ஈட்டின.

நடப்பு சம்பியன்  நியூஸிலாந்தை மே.தீவுகள் வெற்றிகொண்டது

சவுத்ஹாம்ப்டன், ரோஸ் பௌல் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற மிகவும் பரபரப்பான  குழு 2க்கான  மகளிர் ரி20 உலகக் கிண்ண போட்டியில் நடப்பு சம்பியன் நியூஸிலாந்தை ஒரு பந்து மீதம் இருக்க 7 விக்கெட்களால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டது.

ஆலியா அலின் துல்லியமாக பந்துவீசி பதிவுசெய்த 4 விக்கெட் குவியல், ஷேர்மெய்ன் கெம்பெல் பெற்ற ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

எண்ணிக்கை சுருக்கம்

நியூஸிலாந்து 20 ஓவர்களில் 162 – 6 விக். (ப்றூக் ஹாலிடே 40, இஸபெல்லா கேஸ் 39, மெடி க்றீன் 35 ஆ.இ., ஆலியா  அலின் 27 – 4 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் 19.5 ஓவர்களில் 163 – 3 விக். (ஷேர்மெய்ன் கெம்பெல் 90 ஆ.இ., ஹேலி மெத்யூஸ் 48, ஜெஸ் கேர் 17 – 2 விக்.)

ஆட்டநாயகி: ஷேர்மெய்ன் கெம்பெல்.

ஸ்கொட்லாந்துக்கு வரலாற்று வெற்றி

ப்றைஸ் சகோதரிகள் அபாரம்

அயர்லாந்துக்கு எதிராக மென்செஸ்டர் ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற குழு 2க்கான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஸ்கொட்லாந்து 40 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

மகளிர் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் ஸ்கொட்லாந்து ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

ப்றைஸ்   சகோதரிகளான அணித் தலைவி கெத்ரினின் சகலதுறை ஆட்டமும்  சாராவின் சிறந்த துடுப்பாட்டமும் ஸ்கொட்லாந்தை வெற்றி அடையச் செய்தன.

கெத்ரின், சாரா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 106 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 161 – 5 விக். (கெத்ரின் ப்றைஸ் 60, சாரா ப்றைஸ் 49, ஆவா கெனிங் 27 – 3 விக்.)

அயர்லாந்து 19.1 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 121 (அமி ஹன்டர் 39, ஓரியா ப்ரெண்டகாஸ்ட் 33, கேர்ஸ்டி கோர்டன் 16 – 3 விக்.,கெத்தரின் ப்ரேஸர் 19 – 3 விக்., கெத்ரின் ப்றைஸ் 19 – 2 விக்.)

ஆட்டநாயகி: கெத்ரின் ப்றைஸ்

அவுஸ்திரேலியா வெற்றி

மென்ச்செஸ்டர் ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான குழு 1க்கான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் முன்னாள் சம்பியன் அவுஸ்திரேலியா 65 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றியீட்டியது.

ஃபோப் லிட்ச்ஃபீல்ட் பெற்ற அரைச் சதம், ஜோர்ஜியா வெயாஹாமின் சகலதுறை ஆட்டம் சொஃபி மொலிநொக்ஸின் துல்லியமான பந்துவீச்சு என்பன அவுஸ்திரேலியாவை மிக இலகுவாக வெற்றி அடையச் செய்தன.

எண்ணிக்கை சுருக்கம்

அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 172 – 8 விக். (ஃபோப் லிச்ஃபீல்ட் 50, எலிஸ் பெரி 36, ஜோர்ஜியா வெயாஹாம் 32, நொன்குலுலேக்கோ மிலாபா 22 – 2 விக்., அயாபொங்கா காக்கா 33 – 2 விக்., நாடின் டி க்ளார்க் 35 – 2 விக்.)

ஆட்டநாயகி ஜோர்ஜியா வெயாஹாம்.

Previous Post

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமடையலாம்

Next Post

ஆட்டி – திரைப்பட விமர்சனம்

Next Post
ஆட்டி – திரைப்பட விமர்சனம்

ஆட்டி - திரைப்பட விமர்சனம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

மரண தண்டனை குற்றவாளியை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

August 11, 2026
நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் ‘மொத ராத்திரி’ படத்தின் பாடல் வெளியீடு

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் ‘மொத ராத்திரி’ படத்தின் பாடல் வெளியீடு

August 11, 2026
மெஸ்ஸியின் கால்பந்து பயணத்தின் பின்னணியில் இருந்த ஜோர்ஜ் மெஸ்ஸி !

மெஸ்ஸியின் கால்பந்து பயணத்தின் பின்னணியில் இருந்த ஜோர்ஜ் மெஸ்ஸி !

August 10, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

“காணிகளை விடுவிப்போம்” எனக் கூறியவர்கள்… விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

August 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures