Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

June 6, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியதற்காக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் குறித்து இலங்கை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இலங்கையில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பாடல்களைப் பாடுவதற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் போலியானவை மற்றும் தவறானவை என காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இது குறித்து காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், சாவகச்சேரி, நாவற்குழி பகுதியில் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில், விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் பாடல்களைப் பாடியமை மற்றும் அது தொடர்பான காணொளிகளைச் சமூக ஊடகங்களில் பரப்பியமை குறித்து யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இளைஞர் ஒருவர் கைது

இச்சம்பவம் தொடர்பாகக் கடந்த ஜூன் மாதம் 02 ஆம் திகதி கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு | Police Issue Clarification Over Ltte Song Arrest

மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, சந்தேகநபர் அந்த இசை நிகழ்ச்சியில் தான் பாடிய இரண்டு பாடல்களைத் தானே திருத்தி, விடுதலைப் புலிகள் அமைப்பைப் பெருமைப்படுத்தும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவான உள்ளடக்கங்களை உள்ளடக்கி, அதனைப் பலரும் பார்க்கும் வகையில் அவர் திட்டமிட்டுப் பரப்பியுள்ளார் எனப் புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்

இந்தச் செயல் 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 3 (ஜி) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், சந்தேகநபர் கடந்த ஜூன் 03 ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, வரும் ஜூன் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு | Police Issue Clarification Over Ltte Song Arrest

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, இலங்கையில் இசை நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாடுவதற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளதாகச் சில சமூக வலைத்தளங்களில் தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவை முற்றிலும் உண்மைக்குப்புறம்பானவை.

நாட்டின் உயரிய சட்டமான அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தற்போது நடைமுறையிலுள்ள ஏனைய சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டிய பொறுப்பு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்பதைப் இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

பெத்தி- திரைப்பட விமர்சனம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

June 6, 2026
பெத்தி- திரைப்பட விமர்சனம்

பெத்தி- திரைப்பட விமர்சனம்

June 6, 2026
நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

June 5, 2026
அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

June 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures