ஹற்றன் தலைமையக பொலிஸ் பரிசோதகர் டி.பி.கே.எம்.ஹெட்டியாராச்சி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அக்கரைப்பற்றுப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் புதிய பொலிஸ் தலைமை பரிசோதகராக பொறுப்பேற்க உள்ளதாகவும் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எட்டு மாதத்துக்கு முன்னர் பதவியிலிருந்த பொலிஸ் பரிசோதகர் திகாவத்துர, ஹற்றன் சிகை அலங்கரிப்பாளர் ஒருவரைத் தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டம் நடத்தினர் அதையடுத்து முன்னாள் தலைமையக பொலிஸ் பரிசோதகர் மாற்றப்பட்டு, பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரி டி.பி.கே.எம்.ஹெட்டியாரச்சி நியமிக்கப்பட்டிருந்தார்.