ஹன்சிகா செய்த நல்ல விஷயம்! வைரலாக பரவும் விடியோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. நடிப்பதின் மூலம் வரும் பணத்தை பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார் அவர். பல அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் நேற்றிரவு சென்னை தெருக்களில் தூங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கு போர்வை அளித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.