இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 92 மீனவர்களில் 77 பேரை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.
இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களிலுள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அரசாங்கம் விடுதலை செய்துள்ள இவர்கள் நாளை (31) தாயகம் திரும்பவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.