கொழும்பு கோட்டையிருந்து கண்டி வரையான நகர்சேர் ரயில்களின் வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களுக்கு நேர அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை முதல் இந்த நேர மாற்றம் அமுல்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது கொழும்பு கோட்டையிருந்து பிற்பகல் 5.20 க்கு பயணத்தை ஆரம்பிக்கும் இல.1033 என்ற கடுகதி ரயில் ஆகஸ்ட் 27 ஆம் திகதி முதல் பி.ப. 2.20 க்கு பயணத்தை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த ரயில் மாலை 5.26 க்கு கண்டியை சென்றடையும் என அறிவிக்க ப்பட்டுள்ளது.