மீகஹவத்தை, தரனகம சுற்றுப் பாதைக்கு அருகில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லொறியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி பியகம கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 36 வயதுடைய தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மீகஹவத்தை பொலிஸாரினால் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.