ஓவியாவுக்கு கொடுத்த முத்தம் காமத்தில் சேராது என்பது ஆரவ் போன்ற ஆள்களுக்கு மட்டுமே தெரியும் என்று டுவிட்டரில் நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா, ஆரவ்வுடனான காதல் முறிந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த விவகாரத்தில் ஆரவ் ஓவியாவை காதலிக்கவில்லை என்று தெளிவாக கூறியும்.
அவர்தான் ஓவர் இமேஜினேஷன் செய்து கொண்டார் என்று மற்ற போட்டியாளர்கள் பேசினர். நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு ஏன் முத்தம் கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு அது மருத்துவ முத்தம் என்று ஆரவ் கூறி “முத்த நாயகன்” கமலையே அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதற்கு நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.