ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அரசியல் சாசனம் பற்றி எவ்வித தெளிவும் கிடையாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
113 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் தமது ஆசீவாதம் இன்றி ஆட்சி அமைக்க முடியாது என ஜனாதிபதி கூறியிருப்பது, அரசியல் சாசனம் பற்றிய அவரது அறியாமையை வெளிப்படுத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் பிதா ஜே.ஆர்.ஜயவர்தன முதலான முன்னைய ஜனாதிபதிகள் ஐவரும் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும், மாதுலுவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகளின் போதும் அளித்த வாக்குறுதிகளை ஜனாதிபதி மீறியே இவ்வாறு கருத்து வெளியிட்டு வருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.