யாழ் கோப்பாயில் பொலிசார் மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரும் தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
யாழப்பாணம் கோப்பாய் பொலிஸ் அலுவலர்கள் இருவர், கடந்த ஜுலை மாதம் 30ம் திகதி 12 பேர் கொண்ட குழுவினரால் தாக்கப்பட்டிருந்தனர். இச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று புறக்கோட்டை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் நான்கு பேரும், யாழ்ப்பாணத்தில் 2 பேருமாக 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைதானவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.