கனடாவில் செப்டம்பர் 1ஆம் திகதி நடைபெறும் பொங்கு தமிழ் நிகழ்வில் உலகத் தமிழர்களுக்கும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் முக்கிய செய்தி ஒன்று காத்திருக்கிறது. வாருங்கள். அணி திரளுங்கள். விடுதலையின் செய்தியை அறியுங்கள்.
பொங்கு தமிழ் 2001ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை கலைநிகழ்வுகள் மூலம் உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.
சிங்கள இராணுவத்தின் மத்தியின் அடக்குமுறைகளை தகர்த்து யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் அன்று முன்னெடுத்த இப் போராட்டத்தை இன்று நாமும் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்ற தமிழரின் தாகத்தை வலியுறுத்தும் இப் போராட்டம் எம் விடுதலைப் போராளிகளே எமது பிரதிநிதிகள் என்பதையும் தலைவர் எம் மூச்சு என்பதையும்கூட அவாவி நிற்கின்றது.
இது தொடர்பாக அண்மையில் கனடாவில் நடந்த ஊடக சந்திப்பிலும் கலந்துகொண்டேன். எம் கோரிக்கைகளையும் கேள்விகளாக அங்கு முன்வைத்தும் வந்தேன்.
எனவே கனேடிய தமிழ் மக்களே, உலகத் தமிழ் உறவுகளே கனடா பொங்கு தமிழில் ஒன்றாகித் திரண்டு எமது தாயகத்தில் தொடரும் இனவழிப்பு ஆட்சிக்கு முடிவு கட்டி நீதியை வென்றெடுப்போம்.
கிருபா பிள்ளை