பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற, அரசியல் பிரவேசத்தின் 40 ஆண்டு கால நிறைவையொட்டி, ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் ஏற்பாட்டில் இன்று வரவேற்பு நிகழ்வொன்று நடைபெற்றது.
நுவரெலியாவுக்கு சென்ற ரணில், ஆரம்ப நிகழ்வாக ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலும், நீக்ரோதாராம பௌத்த விகாரையிலும், ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலிலும் இடம்பெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார்.
அத்தோடு, ஹட்டனிலிருந்து மட்டக்களப்புக்கான பஸ் சேவையையும் ஆரம்பித்து வைத்தார். டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்திலும், தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.கே.பியதாஸ, வடிவேல் சுரேஷ், லக்கி ஜெயவர்த்தன ஆகியோருடன் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.