2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாடாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இம்முறை பரீட்சையில் மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 227 பேர் தோற்றுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
8.30 க்கு பரீட்சைகள் ஆரம்பமாவதுடன், 8 மணிக்கு முன்னதாக பரீட்சை நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு அனைத்து பரீட்சாத்திகளுக்கும் பரீட்சைகள் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகள், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் சான்றுகள் குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
பரீட்சை முறைகேடுகளில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டால் குறித்த பரீட்சாத்திக்கு பரீட்சைகளில் தோற்றுவதற்கு 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
பரீட்சை முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய, விசேட தொலைபேசி இலக்கங்களை பரீட்சைகள் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்பிரகாரம் 0112 784208, 0112 784537, 0113 188350 அல்லது 0113 140314 என்ற இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.