யாழ்ப்பாணம் நல்லூர்ப்பகுதியில் யாழ் மேல் நீதிமன்றநீதிபதி அவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாக்குதலை கண்டித்து எதிர்வரும் 25ம் திகதி செவ்வாய்கிழமை திருகோணமலையில் கண்டன பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
வடக்கு கிழக்கு ஒருங்கமைப்புக்குழு யாழ்ப்பாணம் நல்லூர்ப்பகுதியில் யாழ் மேல் நீதிமன்றநீதிபதி அவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாக்குதலை கண்டித்து ஊடக அறிக்கையொன்றினையும் வௌியிட்டுள்ளனர்.
இலங்கையின் நீதிபதி ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் இவ் அசாதாரண நிலைமை என்பது தற்காலத்தை அளவிடக் கூடிய ஒரு எடு கோளாகவே விளங்குகின்றது.
இச் சம்பவமானது நீதித்துறைக்கு மட்டுமன்றி நீதியை நிலைநாட்ட விளையும் மனிதஉரிமைசெயற்பாட்டாளர்கள்,மனிதஉரிமை ஆர்வலர்கள்,சிவில் அமைப்புக்கள்,ஊடகவியலாளர்கள ;போன்றோருக்கும் விடுக்கப்பட்ட ஒருஅச்சுறுத்தலாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.
இன்று அவர் கண்கலங்கி நிற்பதானது ஒட்டுமொத்த நீதித்துறையின் மீதுவிழுந்தபேரிடிஎன்றே கருதுகின்றோம்.
இத் தாக்குதல் சம்பவமானது நன்குதிட்டமிடப்பட்டுநடாத்தப்பட்டிருக்கலாம் என்றசந்தேகத்தினையேகாட்டிநிற்கின்றது. இதன் மூலம் இலங்கையில் நீதியைநிலைநிறுத்தவும் மனிதஉரிமைகளைமேம்படுத்தவும் செயற்படும்செயற்பாட்டாளர்களின்பாதுகாப்புகேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் குறித்து இலங்கைஅரசானதுபல் கோணங்களில்
விசாரணைமேற்கொண்டுதகுந்தநடவடிக்கைஎடுக்கவேண்டும். இவ் அநீதிக்கெதிராகவீதியில் இறங்கிமக்கள் குரல் கொடுக்கவேண்டும் எனவேண்டிக் கொள்ளும் அதேவேளை,மேற்படிதாக்குதல் சம்பவத்தினைக் கண்டித்துஎதிர்வரும் 25.07.2017( செவ்வாய் கிழமை)காலை 9.30 மணிக்குவடக்குகிழக்குமாகாணங்களிலுள்ளஅனைத்துமாவட்டங்களிலும் மாபெரும் கண்டனப் பேரணியினைமேற்கொள்ளவடக்குகிழக்குஒருங்கிணைப்புக் குழு அழைப்புவிடுக்கிறது.
அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் தொடர் அச்சுறுத்தல்கள்,மனிதஉரிமைமீறல் சம்பவங்கள் குறித்துசர்வதேசசமூகத்தின்கவனத்திற்குகொண்டுசெல்லும் முகமாகஇக்கண்டனப் பேரணியில் மக்கள்,மனிதஉரிமைசெயற்பாட்டாளர்கள்,ஆர்வலர்கள்,சிவில் அமைப்புக்கள்,தொழிற்சங்கங்கள்,பல்கலைக்கழகமாணவர்கள்,மதகுருமார்கள்;,நலன்விரும்பிகள் எனஅனைவரும்கலந்துஎமது எதிர்ப்பினை ஒன்றிணைந்துவெளிப்படுத்துவோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரணிதொடங்கும் இடங்கள்:
அம்பாறை:-கல்முனை மனிதஉரிமைஆணையகத்திற்குஅருகாமையில்.
மட்டக்களப்பு:- காந்திபூங்கா
திருகோணமலை:-கிழக்குமாகாணஆளுனர் அலுவலகத்திற்குஅருகாமையில்
மன்னார்:-கச்சேரிக்குஅருகாமையில்
வவுணியா:-கச்சேரிக்குஅருகாமையில்
கிளிநொச்சி:-டிப்போசந்தி,கிளிநொச்சி.
முல்லைத்தீவு:-கச்சேரிக்குஅருகாமையில்
.யாழ்ப்பாணம்- கச்சேரிக்குஅருகாமையிலும் இக்கண்டன பேரணிகள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.