ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், தனது பிரபலத்தன்மையில் இருந்து தொடர்ச்சியாக சரிந்தவண்ணம் உள்ளார். இன்று வெளியான கருத்துக்கணிப்பில் இந்த விபரம் தெரியவந்துள்ளது.
பிரதமர் எத்துவா பிலிப், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஆகியோர் மீதான நம்பிக்கை மற்றும் பிரபலத்தன்மை தொடர்பாக பிரபல பத்திரிகை ஒன்றுக்காக iFop நிறுவனம் கருத்துக்கணிப்பு எடுத்துள்ளது. இதில் இம்மாதத்தில் (ஜூலை) ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் 54 வீத பிரபலத்தன்மையை கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. இது கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 10 புள்ளிகள் குறைவாகும். அதேபோல் பிரதமர் எத்துவா பிலிப் கடந்த மாதத்தில் இருந்து 08 புள்ளிகள் குறைந்து 56 வீத பிரபலத்தன்மையுடன் உள்ளார். மே, ஜூன், ஜூலை ஆகிய தொடர்ச்சியான மூன்று மாதங்களில் பிரபலத்தன்மை தொடர்ச்சியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த கருத்துக்கணிப்பினை iFop நிறுவனம், 18 வயதுக்கு மேற்பட்ட 1,947 பேரிடம், ஜூலை 17 ஆம் திகதியில் இருந்து 22 ஆம் திகதிவரை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.