உசைன் போல்ட்டை விட டோனி வேகமாக செயல்படுபவர் என ரசிகர் ஒருவர் டுவிட்டரில் கூறியதற்கு மஹேல ஜெயவர்தனே கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தனே டுவிட்டரில் தனது கருத்துக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், தடகள வீரர் உசைன் போல்ட் வேகத்தை புகழும் வகையில் அவர் மீது தனக்கு பெரிய மரியாதை உண்டு என ஜெயவர்தனே டுவீட் செய்தார்.
அவர் டுவிட்டுக்கு கீழே ரசிகர், உசைன் போல்ட்டை விட இந்திய கிரிக்கெட் வீரர் டோனி வேகமாக செயல்படுபவர் என கூறினார்.
இதற்கு கிண்டலாக பதில் பதிவு செய்த ஜெயவர்தனே, டோனி அவர் பைக்கில் வேகமாக போவதை பற்றி சொல்கிறீர்களா என பதிவிட்டுள்ளார்.