சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராகப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ஊர்வலத்துக்கு கொழும்பு நீதிமன்றம் நேற்றுத் தடையுத்தரவு பிறப்பித்தது.
கண்டியில் இருந்து கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு ஊர்வலம் நேற்றுக் கடவத்தையில் நிறுத்தப்பட்டு, இன்று காலை மீண்டும் கொழும்புக் கோட்டையை நோக்கிப் புறப்பட்டது.
இந்த நிலையில் அரச அலுவலகங்களுக்குள் பிரவேசித்தல் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறுகளை விளைவித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.