இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஒருகொடவத்தை அலுவலகத்தில் பணியாற்றும் மூன்று அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுங்கப் பணிப்பாளரின் ஆலோசனைப்படி ஒருகொடவத்தை பொருட்களை சோதனை செய்யும் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள் மூவர் ஒருகொடவத்தை நிர்வாகப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ரத்மலான பகுதியில் கடந்த 19 ஆம் திகதி கொகெய்ன் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் சுங்கத் திணைக்களம் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே ஒருகொடவத்தை சுங்க அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது