சிறிலங்கா கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, மரைன் பற்றாலியன், திருகோணமலை சம்பூரில் நிலைநிறுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, சம்பூரில் உள்ள எஸ்எல்என்எஸ் விதுர கடற்படைத் தளத்தில் மரைன் படையினருக்கான விடுதி அறை, மூத்த மற்றும் இளைய அதிகாரிகளுக்கான உணவுக்கூடங்கள், நான்கு மாடிகளைக் கொண்ட நிர்வாக வளாகம் என்பன சிறிலங்கா கடற்படைத் தளபதியினால் நேற்று திறந்து வைக்கப்பட்டன.
மரைன் படையினருக்கான பயிற்சி மற்றும் நிர்வாகத் தேவைகளுக்கு ஏற்ற வசதிகளைக் கொண்டதாக இந்த தளம் மாற்றப்பட்டு வருகிறது.
சம்பூர் கடற்படைத் தளம் அமைந்துள்ள பகுதியில் தமிழ் மக்களின் காணிகள் பல இன்னமும் விடுவிக்கப்படாதுள்ளன.
இந்த நிலையில், சிறிலங்கா கடற்படையின் வலிமை வாய்ந்த படைப்பிரிவான, மரைன் படைப்பிரிவு அங்கு நிரந்தரமாக நிலைகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.