பொலன்னறுவை, மின்னேரிய குளத்தில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் 50 வயதுடைய நபரொருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கடவத்தைப் பிரதேசத்தைச் சேர்ச்த கொழும்பு மாநகர சபை ஊழியரெனவும் இரு பிள்ளைகளின் தந்தையெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.
நண்பர்கள் சிலருடன் நீராட சென்றபோதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவதினம் அவருடன் இணைந்து மேலும் 3 பேர் நீரில் மூழ்கியுள்ள நிலையில் அதில் இருவர் காப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த குறித்த நபரின் சடலம் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த நிலையில் மீனவர்கள் சிலரால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.