பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து ஓவியாவை பலர் அழ வைப்பது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களாக ஆரவ் மற்றும் ஓவியா இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. ஆரவ் பிக்பாஸ்ஸிடம் சென்று ஓவியாவை பற்றி புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது வெளியிட்டுள்ள புதிய புரொமோவில் ஓவியா, ஆரவிடம் பேச ஐந்து நிமிடம் கேட்கிறார். ஆனால் ஆரவ் அவரிடம் பேச மறுக்கிறார்.
அதுமட்டுமின்றி அவரை மோசமாகவும் திட்டுகிறார். இதனால் ஓவியா அழுவது போன்ற காட்சி புரொமோவில் இடம்பெற்றிருக்கிறது.
அது மட்டும்மின்றி இதனை ரசிக்கும் வகையில் மகிழ்ச்சியில் திளைக்கும் ரைசாவின் காட்சிகளும் காட்டப்படுகின்றது