காசாவிலுள்ள ஹமாஸ் அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேல் டாங்கிகள் நேற்று தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவும் குறிப்பிட்டுள்ளது.
தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகருக்கு அருகில் உள்ள ஹமாஸ் ஆயுதப் பிரிவின் ஐந்து தளங்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மற்றொரு தாக்குதலில் மத்திய காசாவில் உள்ள விவசாய நிலத்தின் மீது குண்டு விழுந்திருப்பதாக காசா செய்திகள் குறிப்பிடுகின்றனர். இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையில் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் மூன்று யுத்தங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது