கனடாவில் திருட்டில் ஈடுபட்ட தமிழர் உட்பட இருவர் அகப்பட்டனர்

கனடாவில் திருட்டில் ஈடுபட்ட தமிழர் உட்பட இருவர் அகப்பட்டனர்

கனடா நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்த இலங்கை தமிழர் உட்பட இருவரை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓண்டாரியோ மாகாணத்தை நிரஞ்சன் கலைச்செல்வம்(32), ஷாகிலே ஹென்றி(20) மற்றும் ரஷீட் அஹம்த்(25) ஆகிய மூவர் தான் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

இவர்களில் நிரஞ்சன் கலைச்செல்வம் இலங்கை தமிழர் என கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் 2014 முதல் டிசம்பர் 2015ம் ஆண்டு வரை மூவரும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

குறிப்பாக, நகை கடைக்காரர்களின் வீட்டு முகவரியை தெரிந்துக்கொண்டு அவர்களது வீட்டில் நுழைந்து துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர்.

பொலிசாரின் கண்களில் மண்ணை தூவுவதற்காக, இவர்கள் மூவரும் போலியான பிளாஸ்டிக் முகமூடிகளை அணிந்த பின்னரே கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளனர்.

நகைக்கடைக்காரர்களை அடையாளம் கண்டு அவர்களது கார்களில் GPS கருவியை பொருத்தி அவர்களை பின் தொடர்ந்து நூதனை முறையில் கொள்ளைகளை செய்துள்ளனர்.

இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில் பெரியவர்கள், குழந்தைகள் என பலர் இவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

கொள்ளையர்களில் ஒருவரான நிரஞ்சன் கலைச்செல்வம் கடந்த 2007ம் ஆண்டில் துப்பாக்கி முனையில் நிகழ்த்தப்பட்ட கொள்ளைகளிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் மூவரும் Brampton நகரை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ள நிலையில், மூவரில் நிரஞ்சன் கலைச்செல்வம் மற்றும் ஷாகிலே ஹென்றி ஆகிய இருவரை தற்போது பீல் நகர பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மூவரில் ஒருவரான ரஷீத் அஹமத் தலைமறைவாக உள்ளதால் அவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பல்வேறு கொள்ளைகளில் ஈடுப்பட்டு வந்த மூவரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது Ontario மாகாண பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

canada-arast

canada-arast01

canada-arast02

canada-arast03

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News