உலகம் முழுவதும் தற்போது செல்பி மோகம் வெகுவேகமாக பரவியுள்ளது. செல்பியால் உயிரிழக்கும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது.
இந்த நிலையில் அமெரிக்காவில் நடை பெற்ற ஓவிய கண்காட்சி ஒன்றில் பெண் ஒருவர் செல்பி எடுக்கும் போது சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கலைப் பொருட்களை தெரியாமல் உடைத்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற கலைப்பொருட்கள் கண்காட்சி ஒன்றில் ஏராளமான பார்வையாளர்கள் குவிந்து செல்பிகளை எடுத்தனர். அப்போது ஒரு பெண், வரிசையாக கலைப்பொருள்களை அடுக்கி வைத்திருக்கும் இடத்தில் அங்குள்ள ஓவியங்கள் மற்றும் கலைப்பொருட்கள் முன் நின்று செல்பி எடுத்தார். / அப்போது தவறுதலாக ஒருசிறிய பொருள் கீழே விழுந்தது.
அதன் காரணமாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் கீழே விழுந்து நொறுங்கியது.
உடைந்த பொருட்களின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என்றும், அந்த பணத்தை அந்த பெண்ணே கட்ட வேண்டும் என்றும் கண்காட்சியின் நிர்வாகிகள் கூறிவிட்டதால் பெரும் சோகம் அந்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது.