ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ வெப்பர்க் என்பவர் சோதனை முயற்சியாக 720 மணி நேரம் ஓடக்கூடிய ஆம்பியன்ஸ் எனும் படத்தை உருவாக்கி இருக்கிறார்.
இப்படம் ஒரு மாதம் ஓடக்கூடியதாம்.
இந்தப் படம் குறித்து ஆண்ட்ரூ வெப்பர்க் கூறும்போது… இது எனது கடைசி படம் எனவும் இனி படங்களை இயக்க மாட்டேன். எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
72 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தின் டீசர் 2014ம் ஆண்டு ரிலீசானது.
அடுத்து 72 மணி நேரம் ஓடக்கூடிய ட்ரெய்லர் அடுத்த ஆண்டு 2018ம் ஆண்டு ரிலீசாக இருக்கிறது.
இதன்மூலம் நீண்ட நேரம் ஓடக்கூடிய டீசர், ட்ரெய்லர் என்கிற சாதனை மற்றும் பெருமையையும் இப்படம் பெறும்.
இப்படம் வருகிற 2020ஆம் ஆண்டு ரிலீசாக இருக்கிறது.
இதற்குமுன்பு 240 மணிநேரம், (10 நாட்கள்) ஓடக்கூடிய மாடர்ன் டைம்ஸ் ஃபாரெவர் என்ற படம் வெளியாகி இருந்தது என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம்.
தற்போது அப்பட சாதனையை ஆம்பியன்ஸ் படம் முறியடிக்க இருக்கிறது.