நியூசிலாந்துக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன், முதலாம் உலகப் போரில் உயிர் நீத்த நியூசிலாந்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
குறித்த நிகழ்வின் போது அவர் புகியாஹூ தேசிய போர் நினைவுப் பூங்காவில் மலர்வளையம் அர்ப்பணித்து மரியாதையும் செலுத்தியுள்ளார்.
மேற்படி நிகழ்வில் உரையாற்றிய பொரிஸ், “நியூசிலாந்துக்கு நான் விஜயம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறை. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானிய விலகும் அதே சமயம், நியூசிலாந்து போன்ற ஏனைய உலக நாடுகளுடனும் நாம் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதில் அக்கறை செலுத்துகின்றோம். பிரித்தானியாவுடன் அதிகபடியான ஏற்றுமதியை மேற்கொள்ளும் நாடாக நியூசிலாந்து திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது” என தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது அவர் நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் மற்றும் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.