உயர்தர பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்து 230 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதுவரையில் உயர்தர பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் உடனடியாக பரீட்சை திணைக்களத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொலைதூரத்தில் உள்ள பரீட்சார்த்திகள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளலாம். இதற்காக 1911 அல்லது பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளையின் 0112 784 208, 0113 188 350, 0113 140 314 முதலான தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.