இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரொமேஸ் ரத்னநாயக்க நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை படுதோல்வி அடைந்தது.
முக்கியமாக இந்தியா முதல் டெஸ்ட் போட்டியில் 600 ஓட்டங்களையும், இரண்டாவது போட்டியில் 622 ஓட்டங்களையும் குவித்தது.
இதற்கு இலங்கை அணியின் படு மோசமான பந்துவீச்சே காரணம் என கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இலங்கை அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அந்த அணியின் புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரொமேஸ் ரத்னநாயக்க நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதோடு, தற்போது வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக செயலப்படும் சமீந்தா வாஸ் 19 வயதுக்கு உட்பட்ட அணியின் பயிற்சியாளராக மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.