வடமராட்சி, துன்னாலைப் பகுதி இரவோடு இரவாக சிறப்பு அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் தகலவல்கள் தெரிவிக்கின்றன.
இரு பஸ்களில் இரவோடு இரவாகக் கொண்டு வந்து குவிக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையினரும், பொலிஸாரும் துன்னாலைப் பகுதியை முழுமையாகச் சுற்றிவளைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.இன்று காலையில் வீதிகளில் பெரும் எண்ணிக்கையான சிறப்பு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.