ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் திட்டினாலும் பதிலுக்கு திட்ட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அவர்கள் திட்டட்டும் நீங்கள் பதிலுக்கு ஒன்றும் திட்ட வேண்டாம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு அல்லது நல்லாட்சி அரசாங்கத்திற்கு அவதூறு ஏற்படும் வகையில் கருத்து வெளியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீங்கள் எதனையும் பதில் சொல்ல வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் பிரதமர் கோரியுள்ளார்.
இதற்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுங்கமைப்பு பணிகள் மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் என்பனவற்றை எவ்வித குறையும் இன்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் கோரியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் பிரதமர் இவ்வாறு கோரியுள்ளார்.