அரசியலமைப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது கட்சிகளோ தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு இன்றுவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது இதற்கமைய, அவர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களை அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில் பின்னிணைப்பாக சேர்த்துக்கொள்ளவும் வழிநடத்தல் குழு தீர்மானித்துள்ளது.
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் கூட்டமொன்று இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது அக்கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடைக்கால அறிக்கை பணிகள் இன்று முடிவுக்கு கொண்டுவரப்படுமானால், அரசியலமைப்பு பேரவை கூடுவது குறித்த திகதியும் தீர்மானிக்கப்படவுள்ளது.