யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின்போது நேற்று மாலை 12 இளைஞர்கள் திடீரெனக் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் சிலரிடம் அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தினால் வாகனம் ஒன்றில் பயணித்த அனைவரும் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நேற்று மாலை முதல் திருநெல்வேலி, கொக்குவில், கோண்டாவில் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் திடீர் வீதிச் சோதனையில் ஈடுபட்டனர். திருநெல்வேலியில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் பணிபுரிந்துவிட்டு பயணித்தவர்களின் வாகனமும் கோண்டாவிலில் சோதனையிடப்பட்டது.
வாகனத்தில் இருந்தவர்களில் சிலரிடம் தேசிய அடையாள அட்டை இல்லை என்பதால் எல்லோருமே கைது செய்யப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள் கோப்பாய் பொலிசாரிடம் தொடர்பு கொண்டு கேட்டகோது குறித்த இளைஞர்களை விசேட அதிரடிப்படையினரே கைது செய்தமையினால் அவர்களின் அறிக்கையின் பின்பே விடுவிக்க முடியும் எனக் கைவிரித்துவிட்டனர் என்று கூறப்பட்டது.