சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இன் மருத்துவமனையில் இலங்கை மருத்துவர் ஒருவர் பணியாற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பயங்கரவாதிகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சியொன்றில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சிரியாவின் ராக்கப் பிரதேசத்தில் பிரித்தானிய மருத்துவ சேவைக்குச் சமமான, “ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்ய மருத்துமனை” எனும் பெயரில் சேவையை அறிமுகம் செய்யும் வீடியோ காட்சியிலேயே இந்த தகவலை குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யா, அவுஸ்திரேலியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்துள்ள வைத்தியர்கள் இந்த வைத்தியசாலையில் பணியாற்றுவதாக இந்திய வைத்தியர் ஒருவர் அந்த வீடியோ காட்சியில் தகவல் வழங்கியுள்ளார்.