கடந்த 5 தினங்களாக ஆட்டிப்படைத்த பெற்றோல் தட்டுப்பாடு நேற்று ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது.
40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலுடன் ‘நவெஸ்கா லேடி’ எரிபொருள் கப்பல் இலங்கையை நேற்று வந்தடைந்துள்ளது.
அதன் விநியோகப் பணி இன்று ஆரம்பமானதும் பெற்றோல் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும் என்று பெற்றோலிய வளங்கள் அமைச்சு தெரிவித்தது.
இலங்கையின் நாளாந்தத் தேவைக்கு 2 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிபொருள் அவசியமாக இருக்கின்ற போதும் நேற்று முன்தினம் 3 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.
நேற்றைய தினமும் 3 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

