கள்ள நாணயத் தாள்கள் அச்சிட்ட கணவனுக்கு 21ம் திகதி வரை விளக்க மறியலும் மனைவிக்கு 60 ஆயிரம் ரூபா பிணையும் வழங்கப்பட்டதோடு வழக்கு குற்றப் புலனாய்வும் பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை நெடுக்குளம் பகுதியில் உள்ள வீட்டில் 24 வயதுடைய கணவன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் இணைந்து போலி நாணய தாள்கள் அச்சிட்ட குற்றச் சாட்டில் நேற்று முன்தினம் கைதெ செய்யப்பட்டதோடு 2 பிறின்டர், ஸ்கானர், மடிக்கணினிகள் 2 கைத் தொலைபேசிகள் ஆகியவற றுடன் 5 ஆயிரம் ரூபா நாணய தாள்கள் 400, மற்றும்1000 தாள்கள் 168 ம் கைப்பற்றப்பட்டிருந்த்து.
இவ்வாறு கைது செய்யப்பட்ட தம்பதியினர் முன்பு கல்வியங்காடு பகுதியில் இதேபோன்று கள்ள நாணயங்கள் அச்சிட்ட குற்றச்சாட்டில் பொலிசாரினால் தேடப்பட்ட நிலையில் தலை மறைவாக வாழ்ந்து அதேபோன்று தற்போதும் போலி நாணயத்தாள் அச்சிட்ட நிலையிலேயே நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் பொலிசார் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளையில் கணவரை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதோடு மனைவியின் கர்ப்பத்தை கருத்தில் கொண்டு 60 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல அனுமதி வழங்கியது. அத்துடன் குறித்த வழக்கினை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் பாரப்படுத்துமாறு உத்தரவிட்டதோடு வழக்கினை எதிர்வரும் 21ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

