காலி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றிற்கு தேர்வான நிலையில் நாடாளுமன்ற தீர்ப்பின் ஊடாக பதவியிழந்தவரின் இடத்திற்கு புதியவரை நியமிப்பதற்கு மகிந்த அணி புதியதோ் முட்டுக்கட்டையாக சட்டப் பிரச்சணையை எழுப்பியுள்ளனர்.
காலா நாடாளுமன்ற உறுப்பினர் கீதாஞ்சலி இரட்டைக் குடியிருமை கொண்டிருந்த காரணத்தினால் நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் பதவியிழந்தமையினால் குறித்த வெற்றிடத்திற்கு விருப்பு வாக்கின் அடிப்படையில் அடுத்த நிலையி்ல் இருந்தவரை புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஆராய்திருந்த்து.
இந்த நிலையில் நேற்றைய தினம் மகிந்த அணி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஓர் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியதோடு அதில். ஓர் சட்டப் பிரச்சணையினையும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதாவது அரசியல் யாப்பில் 66ம் பந்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று வெற்றிடம் ஏற்படுகின்றபோது அதனை நிரப்பும் வழிமுறைகள் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த பதவியிழப்புகளாக இறப்பு , பதவி விலகல் , போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளபோதிலும் நீதிமன்றினால் பதவி நீக்கம் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. எனவே அவ்வாறு பதவியிழந்த ஒருவரின் இடத்திற்கு புதியவரை நியமிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடையாது. எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணத்தினால் புதிய உறுப்பினரை அறிவிப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தடங்களை எதிர் நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது
