நாட்டில் உயர் சபையான பாராளுமன்றத்தில் கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை நகைச்சுவையான ஒன்றாக மஹிந்த ஆதரவு அணியினர் மாற்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலைக் குழப்புவதே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் பிரதான குறிக்கோளாகும். இதன் மூலம் நாளாந்தம் பொது மக்களின் இலட்சக்கணக்கான பணத்தை அவர்கள் வீணடிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்துக்கு வருகைதந்த நாளிலிருந்து ஆளும் தரப்பிலுள்ள அமைச்சர்களுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருகின்றனர். அது தற்போது நகைச்சுவைக்குரிய விடயமாகியுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கொண்டுவருவதாக கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குப் பலத்தினால் தோற்கடிப்போம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
