வடக்கு மாகாணத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் நடைபெற்று வரும் வேலைத்திட்டங்கள் நிறைவடையும் நிலையில் உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, சாலை அபிவிருத்தி, வர்த்தக வாணிபம் மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சினால் இவை முன்னெ டுக்கப்படுகின்றன.
இதுபற்றி அமைச்சு தெரிவித்ததாவது:
அமைச்சுக்கு நடப்பு வருடத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியாக 280 மில்லியன் ரூபா கிடைத்தது.
இதில் 549 செயற்றிட்டங்கள் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகிறது. மக்களின் நன்மை கருதி சாலை அபிவிருத்தி, கிராம அபிவிருத்தி, மீன்பிடி அபிவிருத்தி, போக்குவரத்து அபிவிருத்தி ஆகிய பிரிவுகளில் வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சாலை அபிவிருத்திக்காக 38 செயற்றிட்டங்களுக்கு 280 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் பேருந்து தரிப்பிடங்கள் அமைத்தல் போன்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கிராம அபிவிருத்திக்காக 392 செயற்றிட்டங்களுக்கு 30 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கிராம மட்டத்தில் உள்ள கட்டடங்களை சீரமைத்தல், நீர், மின் இணைப்பை வழங்கல், சுயதொழில் வாய்ப்புகளை ஊக்குவித்தல், போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல் போன்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மீன்பிடி அபிவிருத்திக்காக 96 செயற்திட்டங்களுக்கு 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் குளங்களில் மீன்குஞ்சுகள் விடுதல், இறால் குடம்பிகள் விடுதல், மீன்பிடி சார்ந்த முகாமைத்துவப் பயிற்சிகளை வழங்கல் போன்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
போக்குவரத்து அபிவிருத்திக்காக 23 செயற்திட்டங்களுக்காக 25 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விபத்துக ளைத் தவிர்க்கக் கூடிய பயிற்சிகள் போன்றன நடைபெற்று வருகின்றன.
நடப்பு ஆண்டில் இந்த செயற்திட்டங்களை முழுமையாக செய்து முடிக்க வேண்டிய தேவை இருப்பதனால் மீளாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, செயற்திட்டங்களை விரைவில் செய்து முடிப்பதற்கு தடையாக உள்ள விடயங்கள் ஆராயப்பட்டு வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
