கண்டி கொழும்பு பிரதான வீதியில் கலகெடிதெனிய பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் தீ பரவியுள்ளது.குறித்த தீயிற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.சம்பவயிடத்திற்கு விரைந்த தீ அணைப்பு பிரிவினர் பரவியுள்ள தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த தீ விபத்தினால் அப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இவ் வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்தமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
பொலிஸார் குறித்த சமபவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
