நாடு முழுவதும் உள்ள 18 தாதிய பாடசாலைகளுக்கு தாதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக கடந்த 11 ஆம் திகதி அமைச்சினால் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிநெறியில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 91 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் என மொத்தமாக 104 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட 104 மாணவர்களில் 47 மாணவர்கள் மட்டுமே இதுவரை யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிப் பாடசாலையில் பதிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள தாதிய பயிற்சிப் பாடசாலைகளில் இம்மாதம் 28 ஆம் திகதி திங்கட்கிழமை தாதிய பயிற்சி நெறி ஆரம்பமாகும் என சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சென்று நியமனக் கடிதம் பெறத் தவறிய மாணவர்கள் யாழ்ப்பாணம் தாதிய பாடசாலைக்கு வந்து பதிவு செய்து கொள்ளும்படியும் நேர்முகப்பரீட்சைக்குச் சென்று நியமனக் கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள் யாழ்.தாதிய பாடசாலையுடன் தொடர்பு கொண்டு தங்கள் நியமனத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடத்துறையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான தாதிய பயிற்சி நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
எனவே விண்ணப்பதாரிகள் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்-பப் படிவங்களை யாழ். போதனா வைத்-திய-சாலையுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளும்படி வைத்தியசாலை நிர்-வாகத்தினர் அறிவித்துள்ளமை குறிப்-பிடத்-தக்கது.
