பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் காவல் கடமைகளில் ஈடுபடுவோருக்கு மாதாந்தம் 22 ஆயிரத்து 500 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்றைய பாராளுமன்ற அமர்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் சட்ட சிக்கல்கள் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இத்தகைய 876 ரயில் கடவைகளுக்காக பெல் அன்ட் லைட் சமிக்ஞை தொகுதிகள் பொருத்தப்படவுள்ளதாகவும் இந்த நடவடிக்கை ஐந்து கட்டங்களாக நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்.
