வேலைக்காரன் படத்தின் சிங்கிள் டிராக் வரும் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் செப்டம்பர் மாதம் 29ம் தேதி ரிலீஸாக உள்ளது. இதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் படம் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிங்கள் டிராக் வேலைக்காரனின் சிங்கிள் டிராக் வரும் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசை என்பதால் நிச்சயம் தெறிக்க விடுவார் என்று நம்பப்படுகிறது.
அஜீத் நடித்துள்ள விவேகம் படம் நாளை ரிலீஸாக உள்ளது. அந்த படத்தோடு வேலைக்காரன் டீஸரை வெளியிடுகிறார்கள். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஃபஹத் பாசில் மலையாள நடிகர் ஃபஹத் பாசில் சிவகார்த்திகேயனுக்கு சமமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவரே டப்பிங்கும் பேசி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ளனர். சிவாவுக்கு இணையாக இளமையாக தெரிகிறாராம் நயன்தாரா. இந்த ஜோடியை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
