நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று (23) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகமனதான தீர்மானம் எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியுடன் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

