காவற்துறை சிறப்பு படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியும் முன்னாள் சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் போதி லியனகே திடீர் விபத்தில் இன்று(18) அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்துள்ளதாக கண்டி மருத்துவனை தெரிவித்தது.
மூளையின் நரம்பொன்று வெடித்துள்ள நிலையில், மாடிப்படியில் இருந்து வீழ்ந்த அவர் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் , இரண்டு தினங்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக காவற்துறை ஊடக பேச்சாளர் ஒருவர் மேலும் தெரிவித்திருந்தார்.
அவரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(20) கண்டி ,கடுகஸ்தொடவில் இடம்பெறவுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்
