பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத், கொழும்பு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணிகளுடன் இன்று(18) முன்னிலையாகியுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலையாகாமை காரணமாக, மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு கடந்த 10ஆம் திகதி, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
